2 ஆட்டோக்களில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்


2 ஆட்டோக்களில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 15 Oct 2023 12:15 AM IST (Updated: 15 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் 2 ஆட்டோக்களில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

குமரியில் 2 ஆட்டோக்களில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரம் மற்றும் போலீசார் நேற்று சின்னமுட்டம் சுனாமி காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் போலீசாரை கண்டதும் ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் போலீசார் ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் சிறு, சிறு மூடைகளில் மொத்தம் 325 கிலோ ரேஷன் அாிசி பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைதொடர்நது ஆட்டோவுடன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல கன்னியாகுமரி கோவளம் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்த போது ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே சமயத்தில் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

1 More update

Next Story