ரேஷன் அரிசி கடத்தியவர் கைது; 30 மூட்டைகள் பறிமுதல்


ரேஷன் அரிசி கடத்தியவர் கைது; 30 மூட்டைகள் பறிமுதல்
x

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 30 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான ேபாலீசார் பெரம்பலூர் டவுன், வாலிகண்டபுரம், நெற்குணம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரம்பலூர்-வி.களத்தூர் சாலையில் நெற்குணம் சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் 30 சாக்கு பைகளில் தலா 50 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகள் இருந்தன. அந்த அரிசியை பரிசோதித்தபோது, ரேஷன் கடைகளில் பொதுவினியோகத்திற்காக வழங்கப்படும் அரிசி என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வேன் டிரைவர் தேனூர் மேலத்தெருவை சேர்ந்த கலியபெருமாளை (வயது 25) கைது செய்யப்பட்டார். ேமலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story