ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
தஞ்சை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசாருக்கு பாபநாசம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் பாபநாசம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த ரகுபதி (வயது 43) என்பதும், மோட்டார்சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 19 மூட்டை 950 கிலோ புழுங்கல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரகுபதியை கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட 19 மூட்டை ரேஷன் அரிசியை பாபநாசம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான வட்டார குடோனில் உதவி தர ஆய்வாளர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.