ரேஷன் அரிசி கடத்தியவர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது


ரேஷன் அரிசி கடத்தியவர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது
x

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தியவர் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

ரேஷன் அரிசி கடத்தல்

குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் காரிமங்கலம் அகரம் சாலை அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியில் 4.7 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி சிக்கியது.

இந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தர்மபுரி சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூரைச் சேர்ந்த முருகன், காரிமங்கலம் அருகே உள்ள கும்பரஅள்ளியை சேர்ந்த சம்பத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது

அப்போது செல்வராஜ் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை கள்ளச் சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் தர்மபுரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்று செல்வராஜை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து செல்வராஜ் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story