மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x

மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

மொடக்குறிச்சி

ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், அப்போது அந்த வழியாக மொபட்டில் 3 மூட்டைகளை வைத்துக்கொண்டு ஒருவர் வந்தார். உடனே போலீசார் மொபட்டை நிறுத்தி மூட்டைகளை பிரித்து பார்த்தார்கள். அதில் ரேஷன் அரிசி இருந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மொபட்டில் வந்தவர் மொடக்குறிச்சி பி.மேட்டுப்பாளையம் பூந்துறை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 33) என்பதும், அவர் வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனை கைது செய்தார்கள். மேலும் 1,250 கிலோ ரேஷன் அரிசியும், மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story