ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு: தொழுநோய் இல்லத்துக்கு வாகன உரிமையாளர்கள் நிதி செலுத்த ஐகோர்ட்டு உத்தரவு


ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு: தொழுநோய் இல்லத்துக்கு வாகன உரிமையாளர்கள் நிதி செலுத்த ஐகோர்ட்டு உத்தரவு
x

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு: தொழுநோய் இல்லத்துக்கு வாகன உரிமையாளர்கள் நிதி செலுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் மதுரை உணவுப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த தனது வாகனத்தை விடுவிக்கக் கோரி சதீஷ்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இடைக்காலமாக மனுதாரர் வாகனத்தை விடுவிக்க வேண்டும். இதற்காக மனுதாரர் ரூ.5 ஆயிரத்தை புதுப்பட்டியில் உள்ள அரசு தொழுநோய் இல்லத்திற்கு செலுத்த வேண்டும். இந்த தொகையில் அங்கு உள்ள நோயாளிகளின் நலன்களுக்காக செலவிட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதேபோல் கோவிந்தசாமி என்பவரின் மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அதே தொழுநோய் இல்லத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும் என்றும் கோவிந்தசாமியின் வாகனத்தையும் இடைக்காலமாக விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story