ரேஷன்கடை பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நுழைவுசீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்


ரேஷன்கடை பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நுழைவுசீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்
x

ரேஷன்கடை பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நுழைவுசீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர்

ரேஷன்கடை பணியிடங்களுக்கானநேர்முக தேர்வு நுழைவுசீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் (ஆன்லைன்) மூலமாக பெறப்பட்டுள்ளன.

இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 14-ந் தேதி முதல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே உள்ள வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.

எனவே நேர்முக தேர்வுக்கான அனுமதி சீட்டு வேலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.drbvellore.net என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முக தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ்கள் (அசல் மற்றும் சுய ஒப்பமிட்ட இருநகல்கள்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று வேலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவருமான கொ.ச.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story