அரசு பஸ்சில் இருந்து வெளியே தூக்கிவீசப்பட்ட ரேஷன் கடை ஊழியர்


அரசு பஸ்சில் இருந்து வெளியே தூக்கிவீசப்பட்ட ரேஷன் கடை ஊழியர்
x

களியக்காவிளை அருேக ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று விழுந்ததால் ரேஷன் கடை ஊழியர் வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை,

களியக்காவிளை அருேக ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று விழுந்ததால் ரேஷன் கடை ஊழியர் வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

ரேஷன் கடை ஊழியர்

மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக-கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதிக்கு நேற்று காலையில் தமிழக அரசு பஸ் (தடம் எண் 84ஏ) ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ்சில் தஞ்சாவூரை சேர்ந்த செல்வராஜ் உள்பட பல பயணிகள் பயணம் செய்தனர். செல்வராஜ் மேல்புறம் அருகே வட்டவிளை பகுதியில் தங்கி இருந்து ஒரு ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பஸ்சின் பின்பக்க வாசல் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.

பஸ் களியக்காவிளை அருேக உள்ள இடைக்கோடு அம்பேத்தன்காலை பகுதியில் சென்ற போது செல்வராஜ் அமர்ந்திருந்த இருக்கை திடீரென கழன்று பின்நோக்கி விழுந்தது. அப்போது அதில் அமர்ந்திருந்த செல்வராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பஸ் வேகமாக சென்று கொண்டிருந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சில் இருந்து வாசல் வழியாக செல்வராஜ் வெளியே சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து சக பயணிகள் கூச்சலிட்டனர். உடனே டிரைவர் அந்த பஸ்சை நிறுத்தினார்.

தீவிர சிகிச்சை

ெதாடர்ந்து படுகாயம் அடைந்த செல்வராஜை பயணிகள் மீட்டு அதே பஸ்சில் ஏற்றி கண்ணுமாமூடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று விழுந்து ரேஷன் கடை ஊழியர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


அன்றே சொன்னது 'தினத்தந்தி'

(பாக்ஸ்) குமரியில் இயக்கப்படும்

ஓட்டை உடைசல் பஸ்களால் ஆபத்து

குமரி மாவட்டத்தில் ஓடும் பெரும்பாலான பஸ்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக பிற மாவட்டங்களில் ஓடி... ஓடி... தேய்ந்த பஸ்களே குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பஸ்கள் மழை காலங்களில் ஒழுகுவதுடன், இருக்கைகள் உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே பயணிகள் நலன் கருதி தரமான பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 1-ந் தேதி 'தினத்தந்தி' இதழில் கட்டுைர வடிவிலான செய்தி வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று விழுந்ததால் பயணி ஒருவர் வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story