ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
அரிசி கடத்தலை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரேஷன் கடைகளிலேயே விண்ணப்பங்கள், டோக்கன் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்திருந்தனர். அதன்படி நெல்லை மாநகரில் 50 ரேஷன் கடைகள், புறநகர் மாவட்டத்தில் 150 ரேஷன் கடைகளில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு சேலை அணிந்தும் பணியாற்றினர்.
Related Tags :
Next Story