ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் கோபிநாத், மாவட்ட பொருளாளர் ரஷீத், தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் பழனிவேல், தட்சிணாமூர்த்தி, ஜெகதீசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சம்பத்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 20 கி.மீ. தூரத்தில் இருந்து பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பணிமாறுதல் செய்ய வேண்டும், மாவட்டம் விட்டு, மாவட்டம் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திற்கு பணிமாறுதல் அளிக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இணை செயலாளர் குணசேகரன், கதிர்வேல், பன்னீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story