ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2 முறை பில் போடும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன்னர் முன்னிலை வகித்தார். ரேஷன் கடைகளில் 2 முறை பில் போடுவதை ரத்து செய்துவிட்டு, ஒரே பில்லில் 2 முறை குறுஞ்செய்தி செல்ல ஆவன செய்ய வேண்டும், ஒரு பில்லுக்கும் 2-வது பில்லுக்கும் இடையில் உள்ள 5 நிமிட கால அவகாசத்தை ரத்து செய்ய வேண்டும், மகளிர் நியாயவிலை கடை மற்றும் மகளிர் சுய உதவிக்குழு நியாயவிலை கடைகளை அரசே ஏற்று நடத்தி அப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பாக பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு குடும்ப அட்டைக்கு 10 ரூபாய் வீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்களை எழுப்பினர்.


Next Story