ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்


நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிகாரியை கைது செய்ய வேண்டும். பட்டியலின பணியாளர்களின் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில பொருளாளர் பிரகாஷ் நன்றி கூறினார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை அடைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடை பணியாளர்கள் தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். நாகையில் உள்ள ரேஷன் கடைகள் பூட்டி கிடப்பதால் போது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story