ரேஷன் கடை பணியாளர்கள் 3 வது நாளாக வேலை நிறுத்தம்


ரேஷன் கடை பணியாளர்கள் 3 வது நாளாக வேலை நிறுத்தம்
x

மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் 3 வது நாளாக வேலை நிறுத்தம்

கடலூர்

கடலூர்

பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருட் களை வழங்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை ரேஷன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள், தாலுகா அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் முத்துபாபு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கந்தன், தேவராஜ், ராமானுஜம், குமரன், பிரபாகரன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் ராமதாஸ், கணேசன், குருமாறன், செல்வம், மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் நிர்வாகி கார்த்திகேயன் நன்றி கூறினார். இதேபோல் பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் என மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பும் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story