ரேலியா அணை நிரம்பியது


ரேலியா அணை நிரம்பியது
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் தொடர் மழை எதிரொலியாக ரேலியா அணை நிரம்பியது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூரில் தொடர் மழை எதிரொலியாக ரேலியா அணை நிரம்பியது.

ரேலியா அணை

குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. குன்னூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பந்துமி பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அணை அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரேலியா அணையின் கொள்ளளவு 43.7 அடியாக உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் அணை ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதற்கிடையே அணையின் பின்புறம் உள்ள மதகு வழியாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாக செல்கிறது. வீணாகும் தண்ணீரை தடுப்பணை கட்டி, அதில் தேக்கி வைத்து வறட்சி காலத்தில் குடிநீர் வினியோகம் செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி மூலம் திட்டமிடப்பட்டது.

தடுப்பணை கட்ட வேண்டும்

அதன் பின்னர் அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. தற்போது தொடர் மழை காரணமாக நடப்பாண்டில் 3-வது முறையாக ரேலியா அணை நிரம்பி உள்ளது. இது பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணையின் பின்புற மதகு வழியாக செல்லும் தண்ணீர் சாலையில் யாருக்கும் பயனின்றி வீணாக செல்கிறது. அணையின் பின்புறம் தடுப்பணையை கட்டி தண்ணீரை சேமிக்க குன்னூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story