இறந்த கார் டிரைவர் உடல் மறு பிரேத பரிசோதனை


இறந்த கார் டிரைவர் உடல் மறு பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்: இறந்த கார் டிரைவர் உடல் மறு பிரேத பரிசோதனை விக்கிரவாண்டியில் நடைபெற்றது

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி உஸ்மான் நகரை சேர்ந்த அப்துல் சுபான் என்பவரது மகன் ஜாபர்(வயது 35). கார் டிரைவரான இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஜாபரின் உடல் மத சம்பிரதாயபடி அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜாபரின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் எனவே அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி அவரது மனைவி அஷரப் நிஷா(30) சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கோர்ட்டு ஜாபரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து சமூக நல தாசில்தார் கணேஷ், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் ஆகியோர் முன்னிலையில் ஒயிட் மசூதி அருகே கபர்ஸ்தானில் புதைக்கப்பட்டிருந்த ஜாபரின் உடலை பேரூராட்சி பணியாளர்கள் தோண்டி எடுத்தனர். தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர் மதுவர்த்தனா, லேப் டெக்னீஷியன் கணேசன் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரை கொண்ட குழுவினர் ஜாபரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர். பிறகு உடல் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஜாபரின் உறவினர்கள், மனைவி அஷரப் நிஷா, வருவாய் ஆய்வாளர் சார்லின், கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ், துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story