கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி


கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி
x

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1-வது அணு உலையில் இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 உலைகள் மூலம் இரண்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஜூலை 24-ம் தேதி 1-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்த உலையில் யுரேனியம் எரிபொருட்கள் நிரப்பும் பணியை விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் மேற்கொண்டு வந்தனர்.

சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற பணி நிறைவடைந்தால் இன்று மதியம் 12 மணி அளவில் 1-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

தற்போது 120 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.


Next Story