ஆதாரப்பூர்வமாக அண்ணாமலை கூறினால் நடவடிக்கை எடுக்க தயார்

ஆதாரப்பூர்வமாக அண்ணாமலை கூறினால் நடவடிக்கை எடுக்க தயார்
x

கனிமவள கொள்ளை குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக கூறினால் நடவடிக்கை எடுக்க தயார் என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

கனிமவள கொள்ளை குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக கூறினால் நடவடிக்கை எடுக்க தயார் என காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இதில் நீர் வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆதாரப்பூர்வமாக கூறினால்

தென்பென்னை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அணைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை செயலாளர் டெில்லி சென்றுள்ளார். அவர் வந்த பின்னர் அதை பற்றி கருத்து தெரிவிக்கிறேன். தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார். பாவம் கவர்னர் அவர் எதையாவது சொல்லுவார்.

தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அது உப்பு சப்பில்லாதது. அவர் ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story