விஜயகாந்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம்..? - பிரேமலதா விளக்கம்
கேப்டன் யாரையெல்லாம் நம்பினாரோ, அவர்கள் அனைவரும் துரோகம் செய்துவிட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை,
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
2011 வரை தேமுதிக யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டது. தனியாக போட்டியிடும்போது தேமுதிகவின் வளர்ச்சி, சக்தி அனைவருக்கும் தெரியவந்தது.
யாரை எல்லாம் கேப்டன் நம்பினாரோ, யாருக்கு எல்லாம் எம்.எல்.ஏ. சீட் கொடுத்தாரோ, அவர்கள் எல்லோரும் துரோகம் செய்தார்கள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவரது உடல் நலமும் பாதிக்கப்பட்டது.
எனக்கு அவசரமாக பதவி வழங்கப்படவில்லை. பெண்கள் அரசியலில் சாதிப்பது கடினம். ஜெயலலிதாதான் என் ரோல்மாடல். எனக்கு அவருடைய தன்னம்பிக்கையும், தைரியமும் மிகவும் பிடிக்கும். தேமுதிக தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமில்லாமல், அன்னையாகவும் இருந்து வருகிறேன்." இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story