பயணிகள் மத்தியில் வரவேற்பு: கோவை-மதுரை ரெயிலில் அலைமோதிய கூட்டம் கூடுதல் ரெயில் இயக்க வலியுறுத்தல்


பயணிகள் மத்தியில் வரவேற்பு:  கோவை-மதுரை ரெயிலில் அலைமோதிய கூட்டம்  கூடுதல் ரெயில் இயக்க வலியுறுத்தல்
x

கோவை-மதுரை ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் கூடுதல் ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கோவை-மதுரை ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் கூடுதல் ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை-மதுரை ரெயில்

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கோவை வழியாக மதுரைக்கு இயக்கப்பட்ட ரெயிலால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். இதன் காரணமாக அந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதற்கிடையே அந்த ரெயிலுக்கு பதிலாக கோவையில் இருந்து மதுரைக்கு நிரந்தர ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து மதுரைக்கு நிரந்தர ரெயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு கோவை-திண்டுக்கல் வழித்தடத்தில் நிரந்தர ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கோவையில் இருந்து புறப்படும் போது இந்த ரெயிலில் பயணிகள் அதிகம் பேர் ஏறி விடுகின்றனர். இதனால் பொள்ளாச்சிக்கு பிறகு வரும் ரெயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க வேண்டி உள்ளது. இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-

நின்று கொண்டு செல்கின்றனர்

கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி வழியாக மதுரைக்கு இயக்கப்படும் ரெயிலை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில் மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழனி முருகன் மற்றும் மருதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இதனால் ரெயிலில் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்து வருகின்றனர்.

எனவே, இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். மேலும் மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருக்கும் போது இயக்கப்பட்ட கோவை-மதுரை ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். 2 மார்க்கத்திலும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் ரெயிலை இயக்கினால், வேலைக்கு செல்வோர் உள்பட பலதரப்பு மக்களும் பயன்படுத்த முடியும். எனவே, இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story