சிவகங்கையில் சமரச நாள் பேரணி மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி பேசியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ந் தேதி சமரச நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சமரச மையத்தில் வரக்கூடிய பிரச்சினைக்கு இருதரப்பினரையும் வைத்து சுமுகமாக பேசி தீர்வு காணப்படும். இந்த மையத்தில் வைக்கப்படும் பிரச்சினைகள் குறித்த ரகசியம் காக்கப்படும். பிரச்சினைகளுக்கு அவசரம் காட்டாமல் உங்களுடைய சம்மதத்துடன் அமைதியாக தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி. சத்தியதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவா் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1. அனிதா கிரிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.11 .சத்திய நாராயணன், மற்றும் சமரசர்கள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து கல்லூரி மாணவிகள், ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள், சைல்டு லயன் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி சிவகங்கை போக்சோ நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.