நல்லிணக்க கூட்டம்
இட்டமொழி பள்ளியில் நல்லிணக்க கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசு மேல்நிலைப்பள்ளியில் சாதி, மத நல்லிணக்க கூட்டம் நடந்தது. திசையன்விளை தாசில்தார் முருகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ரூபன் செல்வகுமார் வரவேற்று பேசினார்.
திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராணி, பஞ்சாயத்து தலைவர்கள் சுமதி சுரேஷ் (இட்டமொழி), த.ரமேஷ் (அழகப்பபுரம்), பழைய மாணவர் சங்க செயலாளர் ஜெ.நம்பித்துரை, கிராம நிர்வாக அலுவலர் இசக்கியப்பன், உதவியாளர் பிரம்மராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை இந்துமதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story