சமரச வார விழிப்புணர்வு பேரணி


சமரச வார விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் சமரச வார விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கடலூர்

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு தீர்வு மற்றும் சமரச மையம் வழிகாட்டுதலின்படி கடலூர் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச வார விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஜவகர் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். சமரச மைய ஒருங்கிணைப்பாளர் லிங்கம், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது டவுன்ஹால் வரை சென்று வந்தது. பேரணியில் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சமரச மையத்தின் மூலம் எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் துரை பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் செயலாளர் ராம்சிங் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மோட்டார் வாகன வழக்கு சிறப்பு நீதிபதி-2 பிரகாஷ் நன்றி கூறினார்.


Next Story