ரூ.29 லட்சத்தில் மனுநீதிச்சோழன் கல்தேர் புனரமைப்பு பணி


ரூ.29 லட்சத்தில் மனுநீதிச்சோழன் கல்தேர் புனரமைப்பு பணி
x

ரூ.29 லட்சத்தில் மனுநீதிச்சோழன் கல்தேர் புனரமைப்பு பணி

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் ரூ.29 லட்சத்தில் மனுநீதிச்சோழன் கல்தேர் புனரமைப்பு பணிக்கு பூமிபூஜையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

குருபூஜை விழா

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கமலமுனி சித்தர் ஜென்ம தின குருபூஜை விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு கமலமுனி சித்தர் ஜென்ம தின குருபூஜை விழாவை தொடங்கி வைத்து, சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கிய 3 சித்த மருத்துவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

நோயற்ற வாழ்வு பெற

பின்னர் அவர் கூறியதாவது:-

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கமலமுனி சித்தருக்கு விழா எடுக்கப்பட்டுள்ளது. கமலமுனி சித்தர் மக்கள் நோயற்ற வாழ்வு பெற அரும் பணியாற்றியுள்ளார். இந்த விழா அவருடைய புகழை போற்றும் வகையில் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர்கள் மணவழகன் (திருவாரூர்), ராணி (நாகை), உதவி கலெக்டர் சங்கீதா, நகரசபை உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், கோவில் செயல் அலுவலர் கவியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

புனரமைப்பு பணிகள்

அதனை தொடர்ந்து திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மனுநீதிச்சோழன் நினைவு கல்தேர் புனரமைப்பு பணிக்கு அமைச்சர் சேகர்பாபு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இங்கு 28 மீட்டர் சுற்றுச்சுவர் அமைத்தல், கருங்கல் தளம் அமைத்தல், மனுநீதிச்சோழன் கருங்கல் சிலை அமைத்தல், வர்ணம் பூசுதல் போன்ற புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

--


Next Story