மத்திய அரசின் சாதனை விளக்க பிரசார ஊர்வலம்
தர்மபுரியில் பா.ஜ.க. மகளிரணி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பிரசார ஊர்வலம் நடைபெற்றது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. மகளிரணி சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் பிரசார ஊர்வலம் நடந்தது. ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் இருந்து தொடங்கிய இந்த பிரசார ஊர்வலத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவி சங்கீதா தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், மாவட்ட அணி தலைவர்கள் புவனேஷ், மதியழகன், இமானுவேல், தளிர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செயலாளரும், மாவட்ட பார்வையாளருமான வெங்கடேஷ் கலந்து கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சாதனை திட்டங்களை விளக்கி பேசினார். முத்ரா திட்டம், இலவச வீடு திட்டம், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை விளக்கி கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ராஜகோபால் கவுண்டர் பூங்காவை வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் சோபன், கிருத்திகா, மாவட்ட செயலாளர்கள் தெய்வமணி, சுப்பிரமணி, சரிதா, சவுந்தரராஜன், ஒன்றிய தலைவர்கள் மாதன், சக்தி, சிவலிங்கம், நாகராஜ், ராஜசேகரன், குமரன், ராமகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.