அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
ஓசூரில் தேசிய திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ்8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாதந்தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2021-22-ம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. இதில் ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 9 மாணவ-மாணவிகள் மாவட்ட அளவில் 2-ம் இடத்தை பெற்று சாதனை படைத்தனர். இந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்.நாகேஷ் மற்றும் ஓசூர் வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
Related Tags :
Next Story