காணாமல் போன மாணவர் 4 ஆண்டுகளுக்கு பின் மீட்பு
காணாமல் போன மாணவர் 4 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் அடுத்த காஞ்சிரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவரது மகன் ஹரிஹரசுதன் (வயது 16), இவர் மதுரையில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு பள்ளி சென்ற மாணவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது தாய் தமிழ்ச்செல்வி திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டால் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினருக்கு மாணவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் தலைமை காவலர் சுசீந்திரன் மற்றும், போலீசார் ராஜேஸ்வரன், நாகேந்திரன் கொண்ட குழுவினர் குன்னூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்த மாணவர் ஹரிஹரசுதனை மீட்டு வந்தனர்.