கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு


கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு
x

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்டெடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியையொட்டி தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு சர்வே எண் 31-யில் 1.80 ஏக்கர் பரப்பு கொண்ட அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலத்தினை மேற்கண்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு பிறகு தனியார் வசம் உள்ள அரசு நிலங்களை மீட்டெடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் கண்ணன் தலைமையில் தொழிற்சாலையின் 70 மீட்டர் நீளம் உள்ள ஆக்கிரமிப்பு மதில் சுவரை வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து ஆக்கிரமிப்பு நிலத்தினை மீட்டனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story