ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x

திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருவண்ணாமலை அருகில் உள்ள ஏந்தல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட அம்மச்சார் அம்மன் மற்றும் பிள்ளையார் கோவில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறநிலையத் துறைக்கு உட்பட்ட நிலங்கள் குறித்து வருவாய்த் துறையின் மூலம் கணக்கெடுப்பு செய்த போது இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 2.84 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் சுதர்சன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வருவாய்த்துறையினருடன் இணைந்து அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்ட நிலத்தில் வேலி அமைக்கப்பட்டது. அப்போது உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, தாசில்தார் சரளா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story