காஞ்சீபுரம் ஞான பிரகாச சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு; அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


காஞ்சீபுரம் ஞான பிரகாச சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு; அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x

காஞ்சீபுரம் ஞான பிரகாச சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்புள்ள இடத்தை மீட்ட அறநிலைத்துறை அதிகாரிகள் மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் சங்கர மடம் அருகே தொண்டை மண்டல ஞான பிரகாச சுவாமிகள் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமான சென்னை. புரசைவாக்கம், வேளாளர் தெருவில் உள்ள 5,862 சதுர அடி நிலத்தை சென்னையை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தை மீட்க கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி தலைமையில், காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்திரத்தினவேலு, அறநிலையத்துறைத்துறை ஆய்வாளர் பிரித்திகா, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், புரசைவாக்கம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தை மீட்டு, தொண்டை மண்டல ஞானப்பிரகாச சுவாமிகள் மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.12 கோடி ஆகும்.


Next Story