ரூ.1¾ கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு


ரூ.1¾ கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு
x
தினத்தந்தி 15 Oct 2023 12:15 AM IST (Updated: 15 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1¾ கோடி மதிப்பிலான நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

திருவாரூர்

நன்னிலம்:

வாஞ்சிநாதர் கோவில்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை நாகை இணை ஆணையர் குமரேசன் தலைமையில் உதவி ஆணையர் ராணி, திருவாஞ்சியம் கோவில் செயல் அலுவலர் ராஜா, நன்னிலம் சரக ஆய்வாளர் கருணாநிதி, கோவில் நிலங்கள் சிறப்பு தாசில்தார் லட்சுமி பிரபா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அளவீடு செய்தனர்.

ரூ.1.70 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு

இந்த ஆய்வில் வாஞ்சிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 16 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது.இதை தொடர்ந்துகோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டனர். பின்னர் அங்கு, இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று பேனர் வைத்தனர்.


Next Story