ரூ.1 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு
நன்னிலம் அருகே பூங்குளம் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டது.
நன்னிலம்:
நன்னிலம் அருகே பூங்குளம் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டது.
அகஸ்தீஸ்வரர் கோவில்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலின் குழுக்கோவிலான பூங்குளம் அகஸ்தீஸ்வரர், லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது.
பூங்குளம் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது.
ரூ.1 கோடி நிலங்கள் மீட்பு
அதன் பேரில் செயல் அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் பூங்குளத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கோவில் நன்செய் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த நிலங்களை அதிகாரிகள் மீட்டு அறிவிப்பு பலகை வைத்தனர். இந்த நிலம் விரைவில் துறையாக அனுமதி பெறப்பட்டு பொது ஏலம் விடப்படும் என செயல் அலுவலர் ராஜா தெரிவித்தார். இந்த ஆய்வு பணியில் கோவில் பணியாளர்கள் வெங்கடகிரி மற்றும் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.