ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்பு


ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்பு
x

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை கிராமத்தில் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் (கோவில் நிலம்) பிரகாசம் தலைமையில் நில அளவையர்கள் அங்கு வந்து, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளந்து மீட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story