நூதன முறையில் வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1.30 லட்சம் மீட்பு சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை


நூதன முறையில்    வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1.30 லட்சம் மீட்பு    சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை
x

நூதன முறையில் வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1.30 லட்சத்தை சைபர்கிரைம் போலீசார் மீட்டனர்.

விழுப்புரம்


விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாஅரவிந்தன் (வயது 20). இவர் கடந்த 30.6.2022 அன்று விழுப்புரம் சைபர்கிரைம் போலீசில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில், தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி ஒன்றில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து ஒரு நாளைக்கு ரூ.7 ஆயிரம் வீதம் பெற்றுக்கொள்ளலாம் என்று இருந்ததை நம்பி, அந்த குறுந்தகவலில் கொடுக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் சிறிது பணம் செலுத்துமாறு மர்ம நபர் கூறியதன்பேரில் அந்த வங்கி கணக்கிற்கு சிறிது, சிறிதாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை அனுப்பியதாகவும், பின்னர் அந்த நபரை தொடர்புகொண்டு பேசியபோது எந்தவித பதில் அளிக்காமலும் பணத்தை மோசடி செய்துவிட்டதாக கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சைபர்கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிசங்கர், முகமதுஅசாருதீன், ராஜசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பணம் மோசடி செய்த அந்த நபரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கம் செய்ததுடன் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மூலமாக அந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை மீட்டனர்.


Next Story