சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.2½ கோடி நிலம் மீட்பு


சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.2½ கோடி நிலம் மீட்பு
x

சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.2½ கோடி நிலம் மீட்பு

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் ரூ.2½ கோடி மதிப்புள்ள சிவன் கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

நிலம் மீட்பு

பட்டுக்கோட்டை நகரம் காசாங்குளம் மேல் கரையில் அமைந்துள்ள விசுவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான காசாங்குளம் கீழ்கரையில் 7357 சதுர அடி பரப்பளவில் மனைப்பகுதி தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதுகுறித்து தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சூரியநாராயணன் உத்தரவுப்படி தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அனிதா தலைமையில் கோவில் நிலங்கள் தனி தாசில்தார் சங்கர், பரம்பரை அறங்காவலர் கடம்பநாதன் ஆகியோர் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் சுந்தரம், ஆய்வாளர்கள் ஜெயசித்ரா, அமுதா, சிறப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட செயல் அலுவலர்கள் வடிவேல்துரை, ரவிச்சந்திரன், ரமேஷ், சிவேந்திரராஜா, ராஜரெத்தினம் மற்றும் கோவில் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கடை, 2 ஓட்டு வீடுகளை மீட்டு அதனை பூட்டி சீல் வைத்தனர். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில் மதிப்பு ரூ.2கோடியே 55 லட்சம் ஆகும்.


Next Story