மேற்கு தாம்பரத்தில் ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு - வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி


மேற்கு தாம்பரத்தில் ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு - வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி
x

தாம்பரம் அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

சென்னை

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், புலிகொரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 11 ஆயிரம் சதுர அடி அளவுள்ள, களம் புறம்போக்கு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு பல்வேறு ஆக்கிரமிப்புகளாக மாற்றப்பட்டிருந்தன.கடந்த மாதம் இதே பகுதியை ஒட்டி ரூ.12½ கோடி மதிப்பிலான 50 சென்ட் அளவுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அரசு நிலம் மீட்கப்பட்ட நிலையில், மீதமிருந்த நிலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் கவிதா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை எனக்கூறி, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதானம் செய்து, சம்பந்தப்பட்ட அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story