பெரியமுல்லைவாயல் கிராமத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு


பெரியமுல்லைவாயல் கிராமத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு
x

பெரியமுல்லைவாயல் கிராமத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனியார் சிலர் அக்கிரமித்து இருந்தனர். அவற்றை மீட்டு வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருவள்ளூர்

ஆக்கிரமிப்பு

மீஞ்சூரில் இருந்து நெமிலிச்சேரி வரை சென்னை வெளிவட்ட 400 அடி சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் தனியார் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக சென்னை வெளிவட்ட சாலை அலுவலகத்திற்கும், கலெக்டர் அலுவலகத்திற்கும் புகார்கள் சென்றது.

இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் மற்றும் நில அளவைத் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பெரியமுல்லைவாயல் கிராமத்தின் வழியாக செல்லும் சென்னை வெளிவட்ட சாலை அருகே தனியார் சிலர் அரசு புறம்போக்கு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.50 கோடி நிலம் மீட்பு

இதனை அடுத்து பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், தமிழ்நாடு சாலை மேம்பாடு நிறுவன அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நெடுஞ்சாலை அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள், குடிசைகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடம் 22 ஏக்கர் ஆகும். இவற்றின் மதிப்பு 50 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story