திருட்டு போன மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
பாளையங்கோட்டையில் திருட்டு போன மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுது.
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அங்கு டாக்டர் படித்து வரும் கேரள மாநிலம் கொட்டக்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் நசீர் என்பவர் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதைபோல் பாளையங்கோட்டை மனக்காவலன்பிள்ளைநகரை சேர்ந்த சாமுவேல் என்பவர் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது.
இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியதாக மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த முகமது சமீர் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி புதூர் பகுதி சேர்ந்த செல்வன் என்பவர் பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 3 மோட்டார் சைக்கிளை திருடி நம்பர் பிளேட் மாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் செல்வனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது.