திருட்டு போன சிலை மீட்பு; வாலிபர் கைது


திருட்டு போன சிலை மீட்பு; வாலிபர் கைது
x

வத்திராயிருப்பில் திருட்டு போன சிலை மீட்கப்பட்டது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள நடராஜர் கோவில் கருவறையில் இருந்த 1½ அடி உயரம் கொண்ட, காரைக்கால் அம்மையார் சிலை திருட்டு போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் வத்திராயிருப்பு கீழ தெருவை சேர்ந்த சந்தனம் (வயது21) அந்த சிலையை திருடியது தெரியவந்தது. அந்த சிலையை மற்றொரு நபரிடம் விற்றுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் பயந்து போன அந்த நபர் வத்திராயிருப்பு போலீஸ்நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வத்திராயிருப்பு பஜார் பகுதியில் ஒரு பையில் சிலையை வைத்து சந்தனம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பிடித்து சோதனை செய்த போது பையில் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த சிலையை போலீசார் மீட்டதுடன், சந்தனத்தை கைது செய்தனர்.

1 More update

Next Story