திருப்பரங்குன்றம் அருகே ரூ.1.65 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு


திருப்பரங்குன்றம் அருகே  ரூ.1.65 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
x

திருப்பரங்குன்றம் அருகே ரூ.1.65 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டது

மதுரை

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கோவில் நிர்வாகம் தனிநபருக்கு குத்தகை உரிமம் விட்டுஇருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக குத்தகை உரிமம் எடுத்தவர் குத்தகை அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு நெல் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை வருவாய் நீதிமன்றத்தில் உரியவர் மீது கோவில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. மதுரை வருவாய் நீதிமன்ற தனித்துணை ஆட்சியர் உரிய இடத்தினை குத்தகை உரிமதாரர் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று மதுரை வருவாய் நீதிமன்ற தனி வருவாய் ஆய்வர் மூலம் குத்தகை உரிமதாரரிடம் இருந்து நிலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனர் சுரேஷ் முன்னிலையில் ரூ.1.65 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நன்செய் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அதிகாரி மணி மேகலா, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சூப்பிரண்டுகள் சுமதி, ரஞ்சனி, துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story