குழித்துறை ஆற்றில் வாலிபர் பிணம் மீட்பு

குழித்துறை ஆற்றில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.
களியக்காவிளை:
குழித்துறை ஆற்றில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது.
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சப்பாத்து பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணம் மிதப்பதை அங்கு குளிக்கச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தெரிவித்தனர். அதைதொடர்ந்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மிதந்த வாலிபரின் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கருப்பு நிற டிஷர்ட் அணிந்திருந்த அந்த வாலிபரின் தலையில் காயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர், ஆற்றில் குளிக்க இறங்கியபோது தவறி விழுந்து இறந்தரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
--------






