கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்பு
கிணற்றில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் நிரோஷ்குமார் (வயது 23). இவர் நேற்றுமுன்தினம் ஆடு மேக்க சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் நிரோஷ்குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது மகேஸ்வரன் என்பவரது தோட்டத்தில் நிரோஷ்குமார் செருப்பு கிடந்தது. இதையடுத்து அந்த கிணற்றில் பார்த்தபோது நிரோஷ்குமார் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நிரோஷ்குமார் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.