108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு டிரைவர், மருத்துவ உதவியாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு கள்ளக்குறிச்சியில் நாளை நடக்கிறது
108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு டிரைவர், மருத்துவ உதவியாளர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு கள்ளக்குறிச்சியில் நாளை நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், இ.எம்.ஆர்.ஐ .கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் ஆகியன இணைந்து 108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் வகையில் வேலை வாய்ப்பு முகாமை நாளை(வெள்ளிக்கிழமை) இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்துகிறது.
இதில், மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் 19 முதல் 30 வயதுடையவராகவும், பி.எஸ்சி.நர்சிங் அல்லது ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி. அல்லது உயிரி அறிவியல் (பி.எஸ்.சி., விலங்கியியல், தாவரவியல், பையோ வேதியியல், மைக்ரோ- பையாலஜி, பையோ டெக்னாலஜி, பிளாண்ட் பையாலஜி ஆகிய பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டிரைவர் பணியிடத்துக்கு 25 முதல் 35 வயதுடையவராக இருத்தல் வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு 9154250864, 9154250856 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.