108 ஆம்புலன்சு பணிக்கு ஆட்கள் தேர்வு


108 ஆம்புலன்சு பணிக்கு ஆட்கள் தேர்வு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:09 AM IST (Updated: 27 Jan 2023 3:52 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சு பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சு பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.

ஆள்சேர்ப்பு முகாம்

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்படுகிறது. இதில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. ஓட்டுநருக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர் உயரம் குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தபட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளர்கள்

மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்சி நர்சிங் உள்ளிட்டவை 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி. இதில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாதம் ஊதியம் ரூ.15,435 (மொத்த ஊதியம்) ஆகும். நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தேர்வு முறையானது எழுத்துத்தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி. அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத்துறையின் நேர்முகத்தேர்வு. இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 044-28888060 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் இந்த தகவலை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

1 More update

Related Tags :
Next Story