தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் பதவியேற்பு


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின்  மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் பதவியேற்பு
x

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் பதவியேற்றார்.

மதுரை


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயராக ஆர்.குணசேகரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். பதவியேற்றுக்கொண்ட அவருக்கு உதவி நிர்வாக என்ஜினீயர், உதவி என்ஜினீயர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர். அவர் கூறும்போது, மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் குறித்து உள்ளாட்சித்துறையினருடன் இணைந்து தினமும் ஆய்வு நடத்தப்படுகிறது. மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை விற்பனை செய்த கடைக்கு நேற்று ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அனைத்து பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும். கலெக்டரின் உத்தரவுப்படி, மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. முதல்-அமைச்சர் தொடங்கிய மஞ்சள்பை திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் சிவப்பு நிற பிரிவில் உள்ள பெரிய தொழிற்சாலைகள் கட்டாயம் 6 ஏக்கர் நிலப்பரப்பில் காடுகள் வளர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் படி, நிறுவனங்களுக்கு காடுகள் வளர்க்க சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.


Next Story