ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை


ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணையை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு வீரர்கள் தேர்வு கடந்த மாதம் 21-ந் தேதி நடந்தது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் போன்றவை நடந்தன. இதனை தொடர்ந்து தகுதியான 39 பேர் ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் அந்தோணியம்மாள், ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story