செங்கோட்டை-மதுரை ரெயில் பழனி வரை நீட்டிப்பு


செங்கோட்டை-மதுரை ரெயில் பழனி வரை நீட்டிப்பு
x

வைகாசி விசாகத்தை முன்னிட்டு செங்கோட்டை-மதுரை ரெயில் பழனி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதால் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மதுரை

மதுரை,

வைகாசி விசாகத்திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் மதுரையில் இருந்து பழனிக்கு அன்றைய தினம் மட்டும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, இந்த ரெயிலானது, செங்கோட்டை-மதுரை ரெயிலுக்கான இணைப்பு ரெயிலாக இயக்கப்படுவதற்கு தென்மாவட்ட ரெயில் பயணிகள் தரப்பில் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அதன்படி, செங்கோட்டை-மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில், செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, காலை 10.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு பழனி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில், பழனியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. அங்கிருந்து, 10 நிமிட இடைவெளியில் செங்கோட்டை புறப்பட்டு செல்கிறது. இந்த சிறப்பு ரெயிலால், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story