செங்கோட்டை நகராட்சி கூட்டம்
செங்கோட்டை நகராட்சி கூட்டம் நடந்தது
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி கூட்டம், தலைவர் ராமலட்சுமி தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, பொறியாளா் ஜெயபிரியா, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜெகன், முத்துபாண்டி, தி.மு.க. கவுன்சிலர்கள் எஸ்எம்.ரஹீம், இசக்கிதுரை பாண்டியன் ஆகியோர் பேசுகையில், செங்கோட்டை நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் வாரச்சந்தை கட்டிடத்தில் நிரந்தர கான்கிரீட் மேற்கூரை அமைக்க வேண்டும். இல்லையெனில் நடைபெற்று வரும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் எஸ்.எம்.ரஹீம் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* கூட்டம் முடிந்ததும், சென்னையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு தலைவர் ராமலட்சுமி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பினர்.