குறைதீர்க்கும் முகாமில் 30 மனுக்களுக்கு தீர்வு


குறைதீர்க்கும் முகாமில் 30 மனுக்களுக்கு தீர்வு
x

குறைதீர்க்கும் முகாமில் 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை கிராமத்தில் பொது வினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அதிகாரி பழனியப்பன் தலைமை தாங்கினார். வெங்கலம் பகுதி வருவாய் ஆய்வாளர் அமிர்தலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 30 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.


Next Story