திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைப்பு
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
பண்டிகை காலங்களில் ரெயில் நிலையங்களில், பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் வகையில், வழியனுப்ப வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்த நடைமேடை அனுமதி கட்டணத்தை அக். 4 ஆம் தேதி முதல் ரெயில்வே நிா்வாகம் ரூ. 20 ஆக உயா்த்தியது.
இந்த நிலையில், பண்டிகை நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில் திருச்சி ரெயில்வே நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடைக் கட்டணம் தற்போது ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடைக் கட்டண உயா்வு 2023 ஜனவரி 31 ஆம் தேதிவரை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story