கடந்த 2020ம் ஆண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் சாலை விபத்துகள் குறைவு -மத்திய அரசு தகவல்


கடந்த 2020ம் ஆண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் சாலை விபத்துகள் குறைவு -மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 26 May 2022 8:58 AM GMT (Updated: 26 May 2022 9:00 AM GMT)

சாலை விபத்து மூலம் ஆண்டுதோறும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன

சாலை விபத்து மூலம் ஆண்டுதோறும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.அதிகரித்திருக்கும் வாகன பெருக்கத்தாலும், வாகன ஓட்டிகள் சிலர் சாலை விதிகளை மீறுவதாலும் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் வருகிறது .விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது

அதில் சாலை விபத்துகள் 18.46 % ஆகவும், உயிரிழப்பு 12.84% ஆகவும் குறைந்துள்ளது எனவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது


Next Story